மேகதாதுவில் அணைகட்ட அனுமதி அளிப்பது மத்திய அரசின் பொறுப்பு - டி.கே.சிவக்குமார் பேட்டி
மேகதாதுவில் அணைகட்ட அனுமதி அளிப்பது மத்திய அரசின் பொறுப்பு என்றும், இந்த விவகாரத்தில் அரசியல் காரணங்களுக்காக தமிழ்நாடு அரசு மேகதாது திட்டத்தை எதிர்த்து வருவதாகவும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூரு:
பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையடுத்து, மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடக மாநில அரசுகள் இடையே பேச்சு வார்த்தைக்கான ஏற்பாடுகளை செய்ய தயாராக இருப்பதாக மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ராமநகரில் நேற்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
பசவராஜ் பொம்மை மவுனம்
பெங்களூருவில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மேகதாதுவில் அணைகட்டும் விவகாரத்தில் தமிழ்நாடும், கர்நாடக அரசும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க தயார் என்று மத்திய மந்திரி தெரிவித்திருக்கிறார். மத்திய மந்திரி இந்த கருத்தை கூறும் போது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் உடன் இருந்தார்.
அந்த சந்தர்ப்பத்தில் மத்திய மந்திரியின் கருத்துக்கு எந்த பதிலும் சொல்லாமல் பசவராஜ் பொம்மை மவுனமாக இருந்தார். இதன்மூலம் தான் ஒரு முதல்-மந்திரி என்ற பொறுப்பை பசவராஜ் பொம்மை மறந்து விட்டார். மத்திய அரசு ‘எங்களால் ஒன்றும் செய்ய முடியாது, நீங்களே பார்த்து கொள்ளுங்கள், பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணுங்கள்’ என்று கூறுவது சரியல்ல?.
பதிலளிக்க வேண்டும்
மேகதாதுவில் அணைகட்ட அனுமதி வழங்க வேண்டியது மத்திய அரசு. அப்படி இருந்தும் மத்திய அரசு தனது பொறுப்பு இல்லாமல் பேசி வருவது சரியல்ல. மேகதாதுவில் அணைட்ட அனுமதி அளிப்பது மத்திய அரசின் பொறுப்பாகும். கேமதாதுவில் அணைகட்ட தமிழக அரசு ஒரு போதும் ஒப்புக்கொள்ளாது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு, அரசியல் காரணங்களுக்காக மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
மத்திய மந்திரியின் கருத்து கர்நாடகத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மவுனமாக இருப்பது சரி இல்லை. மத்திய மந்திரியின் கருத்துக்கு பசவராஜ் பொம்மை தக்க பதிலளிக்க வேண்டும். இல்லையெனில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Related Tags :
Next Story