தொழிலாளி தற்கொலை
நாகர்கோவில் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே உள்ள கோணம் குருசடியை சேர்ந்தவர் டென்னிஸ் (வயது 43), தொழிலாளி. இவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். ஆனால், டென்னிசுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். பலமுறை அழைத்தும் அவர் குடும்பம் நடத்த வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் டென்னிஸ் மனவேதனையில் காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று காலையில் டென்னிஸ் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த டென்னிசின் தாயார் விக்டோரியா அங்கு சென்றார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தார். அப்போது, டென்னிஸ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இதுபற்றி விக்டோரியா உடனே ஆசாரிபள்ளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
Related Tags :
Next Story