இசேவை மையம் முறையாக செயல்பட வேண்டும்


இசேவை மையம் முறையாக செயல்பட வேண்டும்
x
தினத்தந்தி 7 March 2022 4:01 PM IST (Updated: 7 March 2022 4:01 PM IST)
t-max-icont-min-icon

இசேவை மையம் முறையாக செயல்பட வேண்டும்

இசேவை மையம் முறையாக செயல்பட வேண்டும்
அனைத்து தேவைகளுக்கும் ஆதார் அட்டை மிகவும்  இன்றியமையாததாகி விட்டது. ஆதாரில் சிறிய எழுத்து பிழை இருந்தாலும் அரசு உதவி தொடர்பாக விண்ணப்பிக்க முடிவது இல்லை. எனவே ஆதாரில் பிழை திருத்தம், புதிய அட்டைக்கு விண்ணப்பித்தல் பணிக்க இசேவைமையம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இதனால் தினமும் ஆதார் மையங்களுக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில் காலை 10.30 மணி ஆனாலும் அலுவலகத்திற்கு ஊழியர்கள் வருவதில்லை. இசேவை மையத்தில் ஆதார் எடுக்க பல மணி நேரமாக காத்துக்கிடக்க வேண்டி உள்ளது. இதனால் அன்றாடம் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் வேதனை அடைகின்றனர். எனவே இ சேவை மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் விடுப்பு எடுத்தாலும் மாற்று ஊழியரை பணி அமர்த்தி பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story