தரங்கம்பாடி பகுதியில் கடல் சீற்றம்; 5-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள்.
x
கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள்.
தினத்தந்தி 8 March 2022 12:00 AM IST (Updated: 7 March 2022 5:33 PM IST)
t-max-icont-min-icon

தரங்கம்பாடி பகுதியில் கடல் சீற்றம் காரணமாக 5-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

பொறையாறு:-

தரங்கம்பாடி பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. இந்த நிலையில் கடல் சீற்றமாக இருப்பதால் தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், சந்திரபாடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று 5-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்களின் விசைப்படகுகள், நாட்டுப்படகுகள், பைபர் படகுகள் பாதுகாப்பாக துறைமுகங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தரங்கம்பாடி பகுதியில் நேற்று கருங்கல் அலை தடுப்புச்சுவரின் மீது கடல் அலைகள் ஆக்ரோஷமாக மோதிய வண்ணம் இருந்தன. 5 நாட்களாக மீன்பிடிக்க செல்லாத காரணத்தால் மழைக்கால நிவாரணம் போன்று தற்போதும் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story