நூல் கண்டு மாலை அணிந்து வந்த இந்து தேசிய கட்சியினர்


நூல் கண்டு மாலை அணிந்து வந்த  இந்து தேசிய கட்சியினர்
x
தினத்தந்தி 7 March 2022 6:29 PM IST (Updated: 7 March 2022 6:29 PM IST)
t-max-icont-min-icon

நூல் கண்டு மாலை அணிந்து வந்த இந்து தேசிய கட்சியினர்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பின்னலாடை உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களான நூல், சாயப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி இந்து தேசிய கட்சியினர் கழுத்தில் நூல் கண்டு மாலை அணிந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். போலீசார் அவர்களை நுழைவு வாசலில் தடுத்து நிறுத்தி நூல் கண்டு மாலையை அகற்றி விட்டு உள்ளே மனு கொடுக்க அனுமதித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில்,பின்னலாடை உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களான பருத்தி, நூல், பிரிண்டிங் சம்பந்தப்பட்ட பொருட்கள், சாயப்பொருட்களின் விலையேற்றம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் முதல் உற்பத்தியாளர்கள் வரை பலரும் கவலையடைந்துள்ளனர். இப்படியே சென்றால் நிறுவனங்கள் செயல்படுவது கேள்விக்குறியே. பருத்தி ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். நூல் மற்றும் சாயப்பொருட்களின் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

Next Story