மும்பையில் கையில் மது கோப்பையுடன் கார் ஓட்டிய தொழில் அதிபர் கைது
மும்பையில் கையில் மது கோப்பையுடன் சொகுசு காரை ஓட்டிச்சென்ற தொழில் அதிபர், நண்பரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பையில் கையில் மது கோப்பையுடன் சொகுசு காரை ஓட்டிச்சென்ற தொழில் அதிபர், நண்பரை போலீசார் கைது செய்தனர்.
கையில் மது கோப்பை
மும்பை பாந்திரா பேண்டு ஸ்டாண்டு பகுதியில் சம்பவத்தன்று இரவு போக்குவரத்து போலீஸ்காரர் சாகர் ரதோட் (வயது32) ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், 2 பேர் கையில் மது கோப்பையுடன் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காரை ஓட்டிச்சென்று கொண்டு இருப்பதாக கூறினார்.
இதையடுத்து போலீஸ்காரர் சாகர் ரதோட் அந்த சொகுசு காரை பின்தொடர்ந்து சென்றார். அப்போது காருக்குள் 2 பேர் மது குடித்த படியேசென்று கொண்டு இருந்தனர். இதையடுத்து போலீஸ்காரர் முன்னால் சென்று காரை தடுத்து நிறுத்தினார்.
கைது
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் போலீஸ்காரரை மிரட்டினர். இதில் காரில் இருந்த ஒருவர், தனக்கு உயர் அதிகாரிகளை தெரியும் எனவும், உங்களை வேலையைவிட்டே தூக்கி விடுவேன் எனக்கூறி மிரட்டினார்.
இதுகுறித்து போலீஸ்காரர், போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். விரைந்து சென்ற பாந்திரா போலீசார் கையில் மது கோப்பையுடன் காரை ஓட்டிச்சென்று போக்குவரத்து போலீஸ்காரருடன் தகராறில் ஈடுபட்ட கார் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் சேத்தன் சந்தன் (வயது48), அவரது நண்பர் லெட்சுமண் கதம் (57) ஆகியோரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் பேண்டு ஸ்டாண்டு சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
------------
Related Tags :
Next Story