சாமி தரிசனத்துக்கு ரூ.20 கட்டணம் வசூல்


சாமி தரிசனத்துக்கு ரூ.20 கட்டணம் வசூல்
x
தினத்தந்தி 7 March 2022 7:09 PM IST (Updated: 7 March 2022 7:09 PM IST)
t-max-icont-min-icon

பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனத்துக்கு ரூ.20 கட்டணம் வசூலித்ததை எதிர்த்து இந்து முன்னணியினர் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடலூர்

பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனத்துக்கு ரூ.20 கட்டணம் வசூலித்ததை எதிர்த்து இந்து முன்னணியினர் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொக்காபுரம் கோவில்

நீலகிரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டது. 

இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், கடந்த 4-ந் தேதி முதல் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடலூர் வழியாக பொக்காபுரம் சென்று திரும்புகின்றனர். இன்று தேரோட்டம் நடந்ததால், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 

கட்டணம் வசூல்

இந்த நிலையில் பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.20 கட்டணம் பக்தர்களிடம் வசூல் செய்யப்பட்டது. அதற்கு துறை சார்பில் ரசீதும் வழங்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள், கட்டணம் வசூலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இந்து முன்னணியினர் அதன் நிர்வாகி தினேஷ் தலைமையில் போராட்டம் நடத்த முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வாபஸ் பெறப்பட்டது

இதை அறிந்த மசினகுடி போலீசார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் இந்து முன்னணியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது சிறப்பு பஸ் இயக்கப்பட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

மேலும் கோவில் வளாகத்தில் கடைகள் நடத்தவும் அரசுக்கு பணம் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் வருவாய் கிடைக்கிற சூழலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களிடம் பணம் வசூலிக்க கூடாது என்று கோரிக்ைக விடுக்கப்பட்டது. இதை ஏற்று போலீசார் மற்றும் அதிகாரிகள் தரிசன கட்டணம் வசூலிப்பதை வாபஸ் பெற்றனர். இதனால் போராட்டம் நடத்தும் முடிவை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story