நிலுவை சம்பளம் வழங்க நடவடிக்கை


நிலுவை சம்பளம் வழங்க நடவடிக்கை
x
தினத்தந்தி 7 March 2022 7:10 PM IST (Updated: 7 March 2022 7:10 PM IST)
t-max-icont-min-icon

சேரங்கோடு ஊராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள் 3 மாத நிலுவை சம்பளத்தை வழங்க நடவடிக்கை வேண்டும் என்று கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

ஊட்டி

சேரங்கோடு ஊராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள் 3 மாத நிலுவை சம்பளத்தை வழங்க நடவடிக்கை வேண்டும் என்று கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

குறைதீர்க்கும் கூட்டம் இல்லை

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கடந்த ஜனவரி மாதம் முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது தொற்று பரவல் குறைந்து உள்ளதால், கடந்த 4-ந் தேதி முதல் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும் நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெறவில்லை. அங்குள்ள மனுக்கள் பெறும் பெட்டியில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை போட்டு சென்றனர். 

தூய்மை பணியாளர்கள்

அதன்படி பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் சம்பளம் வழங்கக்கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- 

சேரங்கோடு ஊராட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக தூய்மை பணியாளர்கள் 22 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறோம். எங்களுக்கு தினக்கூலி ரூ.120 மட்டும் வழங்கப்படுகிறது. குழந்தைகளின் கல்வி மற்றும் பிற செலவுகளுக்கு சம்பளம் போதுமானதாக இல்லை. பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று குப்பைகளை சேகரித்து, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறோம். 

நிலுவை சம்பளம்

எங்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதனால் குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறோம். 

எனவே சம்பளத்தை உயர்த்துவதோடு குறிப்பிட்ட நாளில் வழங்க வேண்டும். மேலும் நிலுவை சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் குறித்து பொதுமக்கள் கூறும்போது, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனு அளிக்க ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் வந்தோம். ஒரே மனுவை பலமுறை அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட கலெக்டர் தலைமையில் மீண்டும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்றனர்.


Next Story