ஜென்மம், பட்டா நிலங்களை விடுவிக்க வேண்டும்


ஜென்மம், பட்டா நிலங்களை விடுவிக்க வேண்டும்
x
தினத்தந்தி 7 March 2022 7:30 PM IST (Updated: 7 March 2022 7:30 PM IST)
t-max-icont-min-icon

ஜென்மம், பட்டா நிலங்களை விடுவிக்க வேண்டும்

கூடலூர்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு, கூடலூரில் நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் சங்க நிர்வாகி வாசு தலைமை தாங்கினார். குஞ்சு முகமது வரவேற்றார். மாநில இணை செயலாளர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் யோகன்னன், பாஸ்கரன் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். மாநாட்டில் கூடலூர் பகுதியில் சிறு விவசாயிகளின் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும். ஜென்மம், பட்டா நிலங்களை சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பு குழு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும். தடையின்றி அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும். 5 ஏக்கர் நிலம் வரை தமிழ்நாடு தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். 

வனவிலங்குகளிடம் இருந்து மனித உயிர்களையும், விவசாய பயிர்களை பாதுகாக்க வேண்டும். அனைத்து மலைக்காய்கறிகளுக்கும் கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கூறும்போது, எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 9 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றனர்.


Next Story