உக்ரைனில் பாதுகாப்பான இடத்தை தேடி நடுங்க வைக்கும் குளிரில் அலைந்தோம்


உக்ரைனில் பாதுகாப்பான இடத்தை தேடி நடுங்க வைக்கும் குளிரில் அலைந்தோம்
x
தினத்தந்தி 7 March 2022 7:48 PM IST (Updated: 7 March 2022 7:48 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் பாதுகாப்பான இடத்தை தேடி நடுங்க வைக்கும் குளிரில் அலைந்தோம் என்று நீலகிரி திரும்பிய மாணவி பேட்டியின்போது கூறினார்.

ஊட்டி

உக்ரைனில் பாதுகாப்பான இடத்தை தேடி நடுங்க வைக்கும் குளிரில் அலைந்தோம் என்று நீலகிரி திரும்பிய மாணவி பேட்டியின்போது கூறினார்.

உணவு வாங்க கூட்டம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி புது அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த சுகுமாரன் மகள் கீர்த்தனா, உக்ரைனில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். அவரை பெற்றோர்கள் ஆரத்தழுவி வரவேற்றனர். போர் சூழல் பற்றி கீர்த்தனா கூறியதாவது:-

கார்கிவ் நகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். 6-ம் ஆண்டு படித்து வந்தேன். போர் தொடங்கியதும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் சக மாணவர்களுடன் தஞ்சம் அடைந்தேன். ஆங்காங்கே குண்டு வெடித்ததால் அதிர்ச்சி அடைந்தோம். குடிநீர் கிடைக்காமல் கஷ்டப்பட்டோம். கடைகளில் உணவு வாங்கவும், ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கவும் கூட்டம் அதிகமாக இருந்தது. 

அதிச்சியில் இருந்து மீளவில்லை

இதற்கிடையில் ரெயில் மூலம் போலந்துக்கு வந்தோம். அதில் மாணவிகள், பெண்கள், குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. உணவு இல்லாததால் பிஸ்கட், சாக்லேட் சாப்பிட்டு பசியாற்றினேன். 

உடைமைகளை விட்டுவிட்டு பாஸ்போர்ட், கணினி, செல்போனை மட்டும் எடுத்து வந்தேன். மைனஸ் 2 டிகிரி முதல் மைனஸ் 10 டிகிரி வரை நடுங்க வைக்கும் குளிரில் பாதுகாப்பான இடத்தை தேடி அலைந்தேன். நான் படித்து வந்த பல்கலைக்கழகம் தகர்க்கப்பட்டது. மருத்துவ படிப்பை முடிக்க இன்னும் 3 மாதங்களே உள்ளதால், அதற்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும். சொந்த ஊர் திரும்ப உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி. இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story