சாராயம் விற்ற 11 பேர் கைது
குடவாசல் பகுதியில் சாராயம் விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
குடவாசல், மார்ச்.8-
குடவாசல் பகுதியில் சாராயம் விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேடுதல் வேட்டை
திருவாரூர் மாவட்டம் குடவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பருத்தியூர், சேங்காலிபுரம், மணப்பறவை, மஞ்சக்குடி, பூங்காவூர், அரசவனங்காடு, திருவிடைச்சேரி ஆகிய ஊர்களில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் குடவாசல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கைது
அப்போது பருத்தியூர் ஆற்றங்கரையில் சாராயம் விற்ற பருத்தியூரை சேர்ந்த பாலகுமார்(வயது21), ராஜாராம்(29), பாலமுருகன்(40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் குடவாசலை சேர்ந்த மோகன்(33), சேங்காலிபுரம் சாலை தெருவை சேர்ந்த சுரேஷ்(37), சேங்காலிபுரத்தை ேசர்ந்த ராஜகோபால் (55), ஆகியோர் குடவாசலில் சோழ சூடாமணி ஆற்றங்கரையில் சாராயம் விற்ற போது போலீஸ் பிடியில் சிக்கினர்.
இதைப்போல மணப்பறவையை சேர்ந்த பன்னீர்(45), மஞ்சக்குடியை சேர்ந்த ஹரிஹரன்(58), பூங்காவூரை சேர்ந்த கருணாநிதி(50), திருவிடைச்சேரியை சேர்ந்த பாலையன்(70), அரசவனங்காடு பகுதியை சேர்ந்த மாறன்(48) ஆகியோரையும் சாராயம் விற்றதாக போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 740 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
Related Tags :
Next Story