பலத்த மழையால் பருத்தி பயிர்கள் நீரில் மூழ்கின


பலத்த மழையால் பருத்தி பயிர்கள் நீரில் மூழ்கின
x
தினத்தந்தி 7 March 2022 8:03 PM IST (Updated: 7 March 2022 8:03 PM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் பகுதியில் பலத்த மழையால் பருத்தி பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் பகுதியில் பலத்த மழையால் பருத்தி பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். 
பருத்தி சாகுபடி
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில், சம்பா மற்றும் தாளடி அறுவடை பணிகளுக்கு பிறகு, பல விவசாயிகள் பருத்தி சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், உச்சுவாடி, கிளியனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பாத்தி கட்டி, விதைகள் விதைத்து சாகுபடி செய்யப்பட்ட பருத்தி பயிர்கள் சிறிய செடிகளாக வளர தொடங்கி வருகிறது.
பலத்த மழை
இந்தநிலையில் நேற்று முன்தினம் கூத்தாநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. 
இதனால் பருத்தி  சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால், சிறிய பயிர்களாக வளர தொடங்கி உள்ள பருத்தி செடிகள் அழுகும் நிலையில் உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலையுடன் தொிவித்தனர்.
அழுகும் நிலை
இது குறித்து கூத்தாநல்லூர் பகுதி பருத்தி சாகுபடி விவசாயிகள் கூறியதாவது 
ஒரு சில மாதங்களுக்கு முன்பு பருத்தி சாகுபடி பணிகளை மேற்கொண்டு, பருத்தி பயிர்கள் வளர தொடங்கிய போது திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் சாகுபடி செய்யப்பட்ட பருத்தி பயிர்கள் அழுகி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதன் பிறகு வயல்களில் மீண்டும் மறு உழவு செய்து தற்போது மறுபடியும் பருத்தி பயிர்கள் சாகுபடி செய்த நிலையில் மீண்டும் திடீரென பலத்த மழை பெய்து தற்போது பருத்தி பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது. இதனால் மிகவும் கவலை அடைந்துள்ளோம். 
தற்போது தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ள பருத்தி பயிர்கள் தப்புமா? என  தெரியவில்லை. மேலும் பருத்தி சாகுபடி முழுமையாக மேற்கொள்ள முடியுமா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Next Story