விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு


விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 7 March 2022 8:13 PM IST (Updated: 7 March 2022 8:13 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு


விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட செய்தி-மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த காந்தி, ஈரோடு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சக்தி, கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த லெ.பாண்டி, விழுப்புரம் மாவட்ட செய்தி-மக்கள் தொடர்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டார். இவர் நேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து, அவர் மாவட்ட கலெக்டர் மோகன், வருவாய் அலுவலர் ராஜசேகரன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். முன்னதாக செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டிக்கு சக அலுவலர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story