தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு வாலிபர் சாவு
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று(திங்கட்கிழமை) கொரோனாவுக்கு வாலிபர் பலியானார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
தொற்று பாதிப்பு இல்லை
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா தொற்று குறைந்து உள்ளது. நேற்று மாவட்டத்தில் பரிசோதனை செய்யப்பட்ட யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 64 ஆயிரத்து 939 ஆக உள்ளது. நேற்று 3 பேர் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். இதுவரை மொத்தம் 64 ஆயிரத்து 473 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
வாலிபர் சாவு
மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் 18 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடியை சேர்ந்த 35 வயது வாலிபர் நேற்று இறந்து உள்ளார். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 448 ஆக உள்ளது.
Related Tags :
Next Story