ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது
பந்தலூர் அருகே ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது செய்யப்பட்டார். தப்பி ஓட முயன்றபோது அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கினர்.
பந்தலூர்
பந்தலூர் அருகே ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது செய்யப்பட்டார். தப்பி ஓட முயன்றபோது அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கினர்.
ரூ.6 ஆயிரம் லஞ்சம்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் குறுவட்ட நில அளவையராக பழனிசாமி என்பவர் பணியாற்றி வந்தார். இவரிடம், கடந்த சில நாட்களுக்கு முன்பு எருமாடு அருகே உள்ள மூனநாடு ஈரானி பகுதியை சேர்ந்த விவசாயி வாசுதேவன் என்பவர், தனக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்ய விண்ணப்பித்து இருந்தார்.
பின்னர் பழனிசாமி நில அளவை செய்துவிட்டு, அதற்கான சான்றிதழை வழங்க ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத வாசுதேவன், அதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
கையும், களவுமாக...
இந்த நிலையில் இன்று மாலையில் வாசுதேவனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து, பழனிசாமியிடம் வழங்க கூறினர்.
அதன்படி பந்தலூர் நீதிமன்றம் அருகே உள்ள அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்து வரும் பழனிசாமியை நேரில் சந்தித்த வாசுதேவன், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கிய ரூபாய் நோட்டுகளை வழங்கினார்.
அதை பழனிசாமி பெற்று கொள்ளும்போது, அங்கு மறைந்திருந்த இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி தலைமையிலான போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். உடனே அவர் தப்பி ஓட முயன்றார். எனினும் அவரை மடக்கி பிடித்து கையும், களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story