மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்


மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
x
தினத்தந்தி 7 March 2022 10:01 PM IST (Updated: 7 March 2022 10:01 PM IST)
t-max-icont-min-icon

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடலூர்,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் பாரி, சங்கத்தில் நடந்த வேலைகள் தொடர்பான அறிக்கையையும், மாநில பொருளாளர் விஜயபாஸ்கர் நிதி நிலைமை தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பித்தனர். கூட்டத்தில் முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் மீது மேற்கொள்ளப்பட்ட பழி வாங்குதல் நடவடிக்கையை உடனே ரத்து செய்து, பணி ஓய்வு ஆணை வழங்கிட வலியுறுத்தி அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந் தேதி முதல்-அமைச்சரை சந்தித்து பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட வேண்டும். வளர்ச்சி துறை அலுவலர்களின் நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 22-ந் தேதி அனைத்து மாவட்டங்களிலும் தர்ணா போராட்டம் நடத்தப்படும்.

வேலை நிறுத்த போராட்டம்

ஒன்றிய அரசின் தனியார் மயமாக்கல் நடவடிக்கையை கண்டித்து வருகிற 28 மற்றும் 29-ந் தேதிகளில் நடக்கும் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். காலியாக உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கடலூர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், ஓய்வு பெற்ற வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் நடராஜன் மற்றும் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில செயலாளர் பாஸ்கர் பாபு நன்றி கூறினார்.

Next Story