திருவாரூர் மாவட்டத்துக்கு 15-ந் தேதி உள்ளூர் விடுமுறை
ஆழித்தேரோட்ட விழாவைெயாட்டி திருவாரூர் மாவட்டத்துக்கு 15-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
திருவாரூர்;
ஆழித்தேரோட்ட விழாவைெயாட்டி திருவாரூர் மாவட்டத்துக்கு 15-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
உள்ளூர் விடுமுறை
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சிறப்புமிக்க ஆழித்தேரோட்ட விழா வருகிற 15-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி திருவாரூர் மாவட்டத்துக்கு வருகிற 15-ந் தேதி உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கு பதில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந் தேதி (சனிக்கிழமை) திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும் 15-ந் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசின் அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்பட வேண்டும்.
முககவசம்
தேரோட்டத்தில் பக்தர்கள் கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியை பின்பற்றியும், முகக்கவசம் அணிந்தும் பங்கேற்க வேண்டும். இந்த தகவலை திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
----
Related Tags :
Next Story