பதிவு சான்று பெறாமல் மகளிர் விடுதிகளை செயல்படுத்தக்கூடாது கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவு


பதிவு சான்று பெறாமல் மகளிர் விடுதிகளை செயல்படுத்தக்கூடாது கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவு
x
தினத்தந்தி 7 March 2022 10:15 PM IST (Updated: 7 March 2022 10:15 PM IST)
t-max-icont-min-icon

பதிவு சான்று பெறாமல் மகளிர் விடுதிகளை செயல்படுத்தக்கூடாது என்று கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் தனியாரால் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் விடுதிகள், தமிழ்நாடு விடுதிகள், மகளிர் மற்றும் குழந்தைகள் இல்லங்கள் பாதுகாப்பு நலச்சட்டம் 2014- ன் படி பதிவு பெற்று செயல்படுத்திட கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் பதிவு சான்று பெறுவதற்கு மாவட்ட கலெக்டர், கடலூர் என்ற பெயரில் ரூ.3 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலை மற்றும் மகளிர் விடுதிக்கான தாசில்தாரிடம் இருந்து கட்டிட உரிமம் சான்று, பொதுப்பணித்துறையிடம் இருந்து கட்டிட நிலைப்புத்தன்மை சான்று, தீயணைப்பு துறையிடம் இருந்து தீ பாதுகாப்புச்சான்று, உணவு பாதுகாத்தல் மற்றும் தரப்படுத்துதல் துறையிடம் இருந்து உணவு பாதுகாப்பு சான்று ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, கடலூர் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இச்சட்டத்தின் கீழ் அரசு பதிவு சான்று பெறாமல் பணிபுரியும் மகளிர் விடுதிகளை செயல்படுத்தக்கூடாது.
மேற்கண்ட தகவலை கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Next Story