உக்ரைனில் செல்போன் வெளிச்சத்தில் பல கி.மீ. நடந்து எல்லையை கடந்த மயிலாடுதுறை மாணவி


உக்ரைனில் செல்போன் வெளிச்சத்தில் பல கி.மீ. நடந்து எல்லையை கடந்த மயிலாடுதுறை மாணவி
x
தினத்தந்தி 8 March 2022 12:15 AM IST (Updated: 7 March 2022 10:22 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் திக்... திக்... நிமிடங்களை மாணவி நினைவு கூர்ந்தார்

குத்தாலம்:-

மருத்துவ படிப்புக்காக உக்ரைன் சென்ற மாணவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்த மீட்பு நடவடிக்கைக்கு முன்பாக மாணவர்கள் உக்ரைனில் நிலவும் போர் சூழல் காரணமாக கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். சொந்த ஊருக்கு வந்துள்ள மயிலாடுதுறை கோவாஞ்சேரி மாணவி ஆர்த்திகா, உக்ரைன் எல்லையை கடப்பதற்காக இரவு நேரத்தில் செல்போன் வெளிச்சத்தில் பல கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த திக்... திக்... நிமிடங்களை அவர் பதைபதைப்புடன் நினைவு கூர்ந்தார். மேலும் அங்கு மைனஸ் 2 டிகிரி குளிரடித்துள்ளது. கடும் குளிர், போர் சூழல் என பல தடைகளை தாண்டி உக்ரைனை விட்டு வெளியேறியதாகவும், போலந்து எல்லையை சென்றடைந்த பின்னர் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், இந்திய தூதரக அதிகாரிகள் மாணவர்களை நன்றாக கவனித்துக் கொண்டதாகவும் ஆர்த்திகா கூறினார்.

Next Story