ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்


ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 7 March 2022 10:35 PM IST (Updated: 7 March 2022 10:35 PM IST)
t-max-icont-min-icon

பருத்தி, பயறு வகை பயிர்களை விற்பனை செய்ய ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என நாகை மாவட்ட விற்பனை குழு செயலாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்:
பருத்தி, பயறு வகை பயிர்களை விற்பனை செய்ய ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என நாகை மாவட்ட விற்பனை குழு செயலாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள்
மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் நாகை மாவட்ட விவசாயிகளிடம் இருந்து பச்சை பயறு மற்றும் உளுந்து ஆகியவற்றை நாகை விற்பனைக்குழுவின் கீழ் இயங்கும் கீழ்வேளுர் (புத்தர்மங்கலம்), திருப்பூண்டி (சின்னத்தும்பூர்) மற்றும் நாகை (திருகண்ணபுரம்) ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வருகிற ஏப்ரல் மாதத்தில் நேரடியாக கொள்முதல் செய்யப்பட உள்ளது. விற்பனைக்கு முன் தங்களுடைய விவரங்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பதிவு செய்திட வேண்டும்.
 இடைத்தரகர்
நாகை மாவட்டத்தில் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களுடைய பருத்தியினை நாகை விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் திருகண்ணபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஜூன் மாதத்தில் நடைபெறும் ஏலத்தில் விற்பனை செய்யலாம். பருத்தியை பிளாஸ்டிக் சாக்கில் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்.  இடைதரகர்கள் இன்றி அதிக விலைக்கு பருத்தியை விற்பனை செய்து விவசாயிகள் பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story