‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 7 March 2022 10:36 PM IST (Updated: 7 March 2022 10:36 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும் குழியுமான சாலை
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா சங்கனாங்குளம் பஞ்சாயத்து பட்டரைகட்டிவிளை கிராமத்தில் பல ஆண்டுகளாக சாலை குண்டும் குழியுமாக கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
குமார், பட்டரைகட்டிவிளை.

நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
வள்ளியூரில் இருந்து துலுக்கர்பட்டி மார்க்கமாக பரப்பாடிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. தற்போது சில நாட்களாக அந்த பஸ் சரிவர வருவதில்லை. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, நிறுத்தப்பட்ட அந்த பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
கேசவன், பரப்பாடி.

நாய் தொல்லை
வள்ளியூர் அருகே தளபதிசமுத்திரம் கீழுரில் பெருமாள் கோவிலுக்கு பின்புறம் ரெயில்வே தண்டவாளத்தை ஒட்டிய சாலையில் எந்த நேரத்திலும் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. சாலையில் செல்வோரை விரட்டுகிறது. 3 பேரை இதுவரை கடித்துள்ளது. எனவே, நாய் ெதால்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ஐ.கார்த்திக் ராஜா, தளபதி சமுத்திரம்.

சாலையோர மண் அப்புறப்படுத்தப்படுமா?
பாளையங்கோட்டை முருகன் குறிச்சி போக்குவரத்து சிக்னல் பகுதியில் இருந்து நெல்லை சந்திப்பு வரும் ரோட்டின் இடது புறம் கொக்கிரகுளம் வரை பெருவாரியாக மண் சோ்ந்து அப்புறப்படுத்தப்படாமல் இருக்கிறது. இதனால் பெரிய வாகனங்களுக்காக வழிவிடுவதற்காக ரோட்டின் ஓரம் இருசக்கர வாகனத்தை இயக்கும்போது மண்ணில் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே, ஏதேனும் விபத்துகள் நேரிடுவதற்கு முன்பு சாலையோரம் கிடக்கும் மண்ணை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
பிரதீப், பாளையங்கோட்டை.

ஏ.டி.எம். வசதி
ராதாபுரம் தாலுகா திருவம்பலாபுரம் பஞ்சாயத்தை சேர்ந்த ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு தினமும் ஏராளமான முஸ்லிம்கள் வந்து தங்கி செல்கிறார்கள். இங்கு ஏ.டி.எம். வசதி இல்லாததால் அவசர பண தேவைக்காக 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திசையன்விளை அல்லது ராதாபுரம் செல்ல வேண்டி உள்ளது. எனவே இங்கு ஏ.டி.எம். மையம் அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
அ.பிச்சை, தோப்புவிளை.

பயணிகளை குழப்பும் வழித்தட எண்
தென்காசியில் இருந்து கடையம், ரவணசமுத்திரம் விலக்கு வழியாக சம்பன்குளத்துக்கு அரசு பஸ் (வழித்தடம் எண்-23) இயங்கி கொண்டிருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த பஸ் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் தற்போது மீண்டும் இயக்கப்படுகிறது. ஆனால், தற்போது அந்த பஸ்சின் வழித்தடம் எண் மாற்றப்பட்டுள்ளது. பஸ்சின் முன்பகுதியில் உள்ள பெயர் பலகையில் வழித்தடம் எண் 30 எனவும், பஸ்சின் பின்பகுதியில் உள்ள பெயர் பலகையில் வழித்தடம் எண் 31 எனவும் இயங்குகிறது. இதனால் பயணிகள் குழப்பம் அடைகின்றனர். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்ஜத், முதலியார்பட்டி.

பயணிகள் நிழற்குடை தேவை
தென்காசி மாவட்டம் இலஞ்சி ரோட்டில் குத்துக்கல்வலசை அமைந்துள்ளது. இங்கு சுற்று வட்டார மக்கள் அடிக்கடி வந்து செல்வார்கள். இதனால் அதிக வாகன போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக இருப்பதால் இ்ப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். மேலும் நான்கு வழி சந்திப்பு சாலையாகவும் உள்ளது. இந்த நிலையில் அங்கு பயணிகள் நிழற்குடை இல்லாததால் முதியவர்கள், குழந்தைகளுடன் வரும் பெண்கள் வெயிலிலும், மழையிலும் கால் கடுக்க காத்து நின்று மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
கே.திருக்குமரன், கடையம்.

செயல்படாத சிறுவர் பூங்கா
திருச்செந்தூர் கோவிலில் முடி காணிக்கை செலுத்தும் இடத்தின் அருகே அமைந்துள்ள சிறுவர் விளையாட்டு பூங்கா பல வருடங்களாக செயல்படாமல் உள்ளது. எனவே, பூங்காவை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரா.கணேசன், திருச்செந்தூர்.

நேரக்காப்பாளர் நியமிக்கப்படுவாரா?
உடன்குடி பஸ்நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நேரக்காப்பாளர் இல்லை. இதனால் அரசு பஸ்கள்  செல்லும் ஊர் மற்றும் நேரத்தை பயணிகள் அறிய முடியாமல் சிரமப்படுகின்றனர். சென்னை, கோவை மற்றும் பல முக்கிய நகரங்களுக்கு இங்கிருந்து அதிக பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் டவுன் பஸ்களும் அதிக அளவில் மற்ற ஊர்களுக்கு செல்கின்றன. எனவே, குறிப்பிட்ட ஊர்களுக்கு செல்லும் ஊர் மற்றும் விவரங்களை பயணிகள் தெரிந்து கொள்ள வசதியாக உடன்குடி பஸ் நிலையத்தில் நேரக்காப்பாளர் நியமிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஏ.வி.பி.மோகனசுந்தரம், திருச்செந்தூர்.

Next Story