நாமக்கல் அருகே என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


நாமக்கல் அருகே என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 March 2022 11:19 PM IST (Updated: 7 March 2022 11:19 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்:
கல்லூரி மாணவர்
நாமக்கல் அருகே உள்ள கூலிப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் ஸ்ரீதர் (வயது 21). இவர் சேலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். சமீபகாலமாக வீட்டில் இருந்து ஆன்லைனில் படித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீதர் வீட்டில் ஆன்லைனில் படித்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருடைய சித்தப்பா சிவக்குமார், சமையல் செய்ய வீட்டுக்கு சென்று உள்ளார். கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் ஜன்னல் வழியாக பார்த்து உள்ளார். அங்கு அறைக்குள் ஸ்ரீதர் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய ஸ்ரீதரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.
போலீசார் விசாரணை
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஸ்ரீதர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ஸ்ரீதரின் சகோதரர் சம்பத்குமார் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஸ்ரீதர் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story