மோகனூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் எஸ்.வாழவந்தியில் கபடி போட்டி
மோகனூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் எஸ்.வாழவந்தியில் கபடி போட்டி நடந்தது.
மோகனூர்:
மோகனூர் மேற்கு ஒன்றிய தி.மு.க., எஸ்.வாழவந்தி நேதாஜி நற்பணி மன்ற நண்பர்கள் சார்பில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி எஸ்.வாழவந்தி மல்லாண்டவர் கோவில் திடலில் கபடி போட்டி நடந்தது. மோகனூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஏ.பி.ஆர்.சண்முகம் தலைமை தாங்கினார். நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.எஸ்.மூர்த்தி போட்டியை தொடங்கி வைத்தார். மாவட்ட பிரதிநிதி ஜீ.ஆர். கன்ஸ்ட்ரக்சன் வி.சி.கோவிந்தராஜ் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி, பாண்டியராஜன், நேதாஜி நற்பணி மன்ற நண்பர்கள், தி.மு.க. நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 2 நாடகள் நடந்த கபடி போட்டியில் நாமக்கல், சேலம், கரூர், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 46 அணிகள் விளையாடின. இதில் எஸ்.வாழவந்தி நேதாஜி நற்பணி மன்றம் முதல் பரிசையும், நாமக்கல் மந்தார் கிளப் அணி 2-வது பரிசையும், மோகனூர் காந்தமலை ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 3-வது பரிசையும், தொட்டியம் தலைவாஸ் அணி 4-வது பரிசையும் வென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன. எஸ்.வாழவந்தி உதயா நினைவு குழுவிற்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. முடிவில் தி.மு.க. கிளை செயலாளர் சாமிநாதன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story