கரூர் மாவட்டத்தில் சாரல் மழை
கரூர் மாவட்டத்தில் சாரல் மழை பெய்தது.
வேலாயுதம்பாளையம்,
வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், கூலக்கவுண்ணணனூர், காகிதபுரம், மூலிமங்கலம், செக்குமேடு, மூர்த்திபாளையம், நாணப்பரப்பு, புகழூர், செம்பாடம்பாளையம், அய்யம்பாளையம், தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம் ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கரூரில் கடந்த சில தினங்களாக இரவில் பனி பொழிவும், பகலில் வெயிலின் தாக்கமும் இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்தவகையில் கரூரில் நேற்று காலை சாரல் மழை பெய்தது. பின்னர் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் இல்லாமல், நேற்று நாள் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதேபோல் நொய்யல், குறுக்குச்சாலை, அண்ணாநகர், அத்திப்பாளையம், குப்பம், நத்தமேடு, குந்தாணிபாளையம், வேட்டமங்கலம், குளத்துப்பாளையம், மரவாபாளையம், சேமங்கி, ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நள்ளிக்கோவில், மூலிமங்கலம், கொங்கு நகர், காகிதபுரம், பேச்சிப்பாறை, முத்தனூர், கவுண்டன்புதூர், திருக்காடுதுறை, நடையனூர், பாலத்துறை, தவுட்டுப்பாளையம், நஞ்சை புகளூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு சுமார் 7.30 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story