கருங்கல் அருகே ஓய்வு பெற்ற போக்குவரத்து அதிகாரி பொக்லைன் எந்திரம் மோதி சாவு


கருங்கல் அருகே ஓய்வு பெற்ற போக்குவரத்து அதிகாரி பொக்லைன் எந்திரம் மோதி சாவு
x
தினத்தந்தி 7 March 2022 11:24 PM IST (Updated: 7 March 2022 11:24 PM IST)
t-max-icont-min-icon

கருங்கல் அருகே ஓய்வு பெற்ற போக்குவரத்து அதிகாரி பொக்லைன் எந்திரம் மோதி பரிதாபமாக இறந்தார்.

கருங்கல், 
கருங்கல் அருகே ஓய்வு பெற்ற போக்குவரத்து அதிகாரி பொக்லைன் எந்திரம் மோதி பரிதாபமாக இறந்தார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஓய்வு பெற்ற போக்குவரத்து அதிகாரி
கருங்கல் அருகே உள்ள மாங்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேந்திர நாதன் (வயது 78). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 
நேற்று காலையில் இவர் வீட்டின் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய பின்னால் பொக்லைன் எந்திரம் வந்தது. அந்த எந்திரத்தை மத்திக்கோடு அம்பலத்தட்டுவிளை பகுதியை சேர்ந்த ஜான்சன் என்பவர் ஓட்டி வந்தார்.
பரிதாப சாவு
இந்தநிலையில் பொக்லைன் எந்திரம் எதிர்பாராதவிதமாக சுரேந்திரநாதன் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த சுரேந்திரநாதனின் குடும்பத்தினர் ஓடி வந்து உடலை பார்த்து கதறி அழுதனர். இது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. கருங்கல் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான்சனை கைது செய்தனர்.

Next Story