வெப்படை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு
வெப்படை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
நாமக்கல்:
குமாரபாளையம் தாலுகா வெப்படை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து அதிகாரிகளிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக வீடோ, நிலமோ இல்லை. கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். குழந்தைகளை வைத்து கொண்டு வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே எங்கள் குடும்ப நலன் கருதி, வறுமையில் வசிக்கும் ஏழைகளாகிய எங்களுக்கு அரசு, இலவச வீட்டுமனை பட்டா தந்து உதவ வேண்டும்.
இவ்வாறு அதில் அவர்கள் கூறி இருந்தனர்.
Related Tags :
Next Story