நாங்கள் தங்கியிருந்தது பாதுகாப்பான பகுதி. பிரம்மபுரம் மருத்துவ மாணவி பேட்டி
உக்ரைன் நாட்டில் நாங்கள் இருந்த பகுதி பாதுகாப்பான பகுதி என காட்பாடி பிரம்மத்தை சேர்ந்த மருத்துவ மாணவி பவ்யாஸ்ரீ கூறினார்.
காட்பாடி
உக்ரைன் நாட்டில் நாங்கள் இருந்த பகுதி பாதுகாப்பான பகுதி என காட்பாடி பிரம்மத்தை சேர்ந்த மருத்துவ மாணவி பவ்யாஸ்ரீ கூறினார்.
மருத்துவ மாணவி
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்தது. இதனால் உக்ரைன் நாட்டில் சிக்கிய ஆயிரக்கணக்கான இந்தியர்களையும் மருத்துவ மாணவர், மாணவிகளையும் மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் வினிட்சியா பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வந்த வேலூர் மாவட்டம், காட்பாடி பிரம்மபுரத்தைச் சேர்ந்த ஜெயகோபி- கலைச்செல்வி தம்பதிகளின் மகள் பவ்யா ஸ்ரீ இவர் நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான காட்பாடி பிரம்மபுரம் வந்துள்ளார்.
உக்ரைனில் இருந்து இந்தியா வந்தது குறித்து மாணவி பவ்யாஸ்ரீ கூறியதாவது:-
நான் உக்ரைன் நாட்டில் வினிட்சியா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்து வந்தேன். என்னுடன் தமிழகத்தை சேர்ந்த 40 பேர் தங்கி படித்து வந்தனர். உக்ரைன் நாட்டில் நடக்கும் போர் காரணமாக நாங்கள் கடந்த 1-ந் தேதி உக்ரைனின் அண்டை நாடான ருமேனியாவுக்கு இந்திய தூதரகம் ஏற்பாடு செய்த பஸ் மூலம் வந்து சேர்ந்தோம். அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்தோம். 5-ந் தேதி ருமேனியாவில் இருந்து டெல்லிக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்த விமானத்தில் 240 பேருடன் வந்தோம். டெல்லியில் இருந்து சென்னைக்கு 6-ந் தேதி காலை வந்தோம்.
பாதுகாப்பான பகுதி
பின்னர் சென்னையில் இருந்து காரில் காட்பாடி பிரம்மபுரத்திற்கு வந்தோம். உக்ரைனில் நாங்கள் தங்கியிருந்த பகுதி பாதுகாப்பான பகுதி ஆகும். மேலும் என்னுடைய பெற்றோர் தினமும் என்னிடம் பேசிக்கொண்டிருந்தனர். அது எனக்கு தைரியத்தை அளித்தது. அதனால் பயப்படாமல் இருந்தேன். கடவுள் அருளால் தாயகம் திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர் ராகவன்
ஒடுகத்தூர் அடுத்த ஆசனம்பட்டு பகுதியை சேர்ந்த ஞானசேகரன் மகன் ராகவன் (18) உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் நேஷனல் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.
உக்ரைன் நாட்டில் கடும் சண்டை நடந்து வருவதால் இந்தியா திரும்பிய ராகவன் கூறியதாவது:-
உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் நேஷனல்மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகின்றேன். என்னுடன் இந்திய மாணவர்கள் படித்துவருகின்றனர். உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்யாவிற்கும் கடும்போர் நடைபெறுவதால் கல்லூரிகள் மற்றும் நான் தங்கியிருந்த விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டன. உக்ரைன் நாட்டில் சிக்கிய பல்லாயிரக்கணக மாணவர்கள் மீட்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டது. விடுதியிலிருந்து சிறப்பு ெரயில் மூலம் ருமேனியா வந்தடைந்தோம். அங்கிருந்து சிறப்பு பஸ் மூலம் ருமேனியா விமான நிலையத்திலிருந்து மார்ச் 5-ந்் தேதி இரவு பதினொரு மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டோம். 6-ந் தேதி தேதி காலை 9 மணிக்கு டெல்லி வந்து அடைந்தோம். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தோம். அங்கிருந்து காரில் புறப்பட்டு எனது சொந்த கிராமமான ஆசனாம்பட்டிற்கு வந்து அடைந்தோம்.
உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களையும், மருத்துவ மாணவர்களையும் தமிழக அரசும் மத்திய அரசும் பாதுகாப்பாக மீட்டுவந்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஒருவாரம் பதுங்குகுழியில் இருந்து உணவு தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டோம். ஒரு நாள் போர் நிறுத்தத்தின் போது நாங்கள் வெளியே வந்து ெரயில் மூலம் பயணம் செய்து பல மணி நேரம் சிறப்பு பேருந்துக்காக காத்திருந்து விமான நிலையம் வந்தடைந்தது மெய் சிலிர்க வைக்கிறது என்று கூறினார்.
Related Tags :
Next Story