திருமண வீட்டில் 121 பவுன் நகைகள் கொள்ளை போனதாக வழக்குப்பதிவு தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
திருமண வீட்டில் 121 பவுன் நகைகள் கொள்ளை போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் பெரியார்நகரில் டபுள் ரோடு பகுதியை சேர்ந்தவர் மனோன்மணி. இவரது மகன் பாரதிராஜா, கனடாவில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவரது தங்கையான வெண்ணிலாவுக்கு நேற்று முன்தினம் காரைக்குடியில் திருமணம் நடந்தது. இதற்காக கடந்த 5-ந் தேதி இரவு வீட்டை பூட்டி விட்டு மனோன்மணி குடும்பத்தினர் காரைக்குடி சென்றனர். திருமணம் முடிந்த பின் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டினுள் பூஜை அறை, பீரோ உள்பட ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளை போகியிருந்தன. இது தொடர்பாக டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதலில் 70 பவுன் நகைகள் வரை ெகாள்ளை போனதாக பராதிராஜா போலீசாரிடம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மேலும் 50 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இதையடுத்து மொத்தம் 121 பவுன் நகைகள் கொள்ளை போனதாக பாரதிராஜா புகார் அளித்துள்ளார். அதன்அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story