ஆரல்வாய்மொழியில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆரல்வாய்மொழியில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழியில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
ஆரல்வாய்மொழி வடக்கூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது46), ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். அய்யப்பன் உடல்நலக் குறைவினால் பல மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். மனைவி மாரியம்மாள் அந்த பகுதியில் உள்ள வலை கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று மாரியம்மாள் மற்றும் மகன்கள் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். அய்யப்பன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக தெரிகிறது. மாலையில் மகன் வீட்டுக்கு வந்த போது அய்யப்பன் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார், அய்யப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story