தபால்துறை சார்பில் ஆதார் அட்டையில் பெயர் திருத்த சிறப்பு முகாம்


தபால்துறை சார்பில் ஆதார் அட்டையில் பெயர் திருத்த சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 8 March 2022 12:52 AM IST (Updated: 8 March 2022 12:52 AM IST)
t-max-icont-min-icon

தபால்துறை சார்பில் ஆதார் அட்டையில் பெயர் திருத்த சிறப்பு முகாம் 11, 12-ந் தேதிகளில் நடக்கிறது

பெரம்பலூர்
ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்ட தபால் கண்காணிப்பாளர் விஜயா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெரம்பலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் தேவையை கருத்தில் கொண்டு ஆதார் அட்டையில் திருத்தம் செய்தல், புதிய ஆதார் அட்டைக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்தல், பழைய ஆதார் அட்டையில் பெயரில் எழுத்து பிழை திருத்தம், முகவரி திருத்தம், செல்பேசி எண் திருத்தம் அல்லது பயோமெட்ரிக் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் பெரம்பலூர்-அரியலூர் சாலையில் கவுல்பாளையம் அருகே உள்ள மகாத்மா காந்தி பப்ளிக் பள்ளி வளாகத்தில் 10, 11-ந் தேதி ஆகிய 2 நாட்கள் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. இந்த சிறப்பு முகாமில் பெரம்பலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அதற்கான கட்டணங்களை செலுத்தி திருத்தங்கள் செய்து கொள்ளலாம். புதிய ஆதார் அட்டை பதிவு செய்திட கட்டணம் ஏதுமில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


Next Story