மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்; நாளை தொடங்குகிறது


மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்; நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 8 March 2022 12:59 AM IST (Updated: 8 March 2022 12:59 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம் நாளை தொடங்குகிறது.

திருச்சி, மார்ச்.8-
திருச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம் நாளை தொடங்குகிறது.
மருத்துவ முகாம்
திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் அனைத்து வட்டார வளமையங்களிலும் நாளை (புதன்கிழமை) முதல் 28-ந்தேதி வரை நடைபெற உள்ளது. பிறந்த குழந்தை முதல் 18 வயதுடைய அனைத்து மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளும் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.
 நாளை (புதன்கிழமை) அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு முத்தரசநல்லூர்ஊராட்சிஒன்றியதொடக்கப்பள்ளியிலும், 10-ந் தேதி மண்ணச்சநல்லூர் ஒன்றியத்திற்கு மண்ணச்சநல்லூர்அரசுஆண்கள்மேல்நிலைப்பள்ளியிலும், 11-ந்தேதி மணிகண்டம் ஒன்றியத்திற்கு, சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 14-ந்தேதி திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு, காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 15-ந்தேதி முசிறி ஒன்றியத்திற்கு, முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது.
லால்குடி
16-ந்தேதி லால்குடி ஒன்றியத்திற்கு லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 17-ந்தேதி துறையூர் ஒன்றியத்திற்கு அரசு பெண்கள்மேல்நிலைப்பள்ளியிலும், 18-ந்தேதி மணப்பாறை ஒன்றியத்திற்கு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 19-ந்தேதி திருச்சி நகரத்திற்கு, எஸ்.எம்.மேல்நிலைப்பள்ளியிலும், 21-ந்தேதி புள்ளம்பாடி ஒன்றியத்திற்கு, புள்ளம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 22-ந் தேதி உப்பிலியபுரம் ஒன்றியத்திற்கு, உப்பிலியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 23-ந்தேதி மருங்காபுரி ஒன்றியத்திற்கு, கோவில்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளியிலும் முகாம் நடக்கிறது.
தொட்டியம்
 24-ந் தேதி தொட்டியம் ஒன்றியத்திற்கு, பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 25-ந் தேதி திருச்சி மேற்கு ஒன்றியத்திற்கு, கண்டோன்மென்ட் ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியிலும், 26-ந் தேதி வையம்பட்டி ஒன்றியத்திற்கு, வையம்பட்டி அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 28-ந் தேதி தா.பேட்டை ஒன்றியத்திற்கு தா.பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் முகாம்கள் நடைபெறவுள்ளன.
இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

Next Story