சாலை விபத்தில் படுகாயமடைந்தவர் சாவு


சாலை விபத்தில் படுகாயமடைந்தவர் சாவு
x
தினத்தந்தி 8 March 2022 1:19 AM IST (Updated: 8 March 2022 1:19 AM IST)
t-max-icont-min-icon

சாலை விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழந்தார்

பெரம்பலூர்
பெரம்பலூர் போலீஸ் சரகம், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள தங்கும் விடுதி எதிரில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரை கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் நடந்து சென்றவர் மீது  எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த அந்த நபர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story