ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில், மான்ராஜ் எம்.எல்.ஏ. ஆஜர்
ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மான்ராஜ் எம்.எல்.ஏ. நேற்று ஆஜரானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மான்ராஜ். இவர் மீது அ.தி.மு.க. மகளிர் அணி நிர்வாகி ரீட்டா என்பவர் தன்னை அவதூறாக பேசியதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் மான்ராஜ் உள்பட 4 பேர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் கடந்த மாதம் 22-ந் தேதியன்று மான்ராஜ் எம்.எல்.ஏ.வுக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் கோர்ட்டு உத்தரவுப்படி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி சிவராஜேஷ் முன்பு மான்ராஜ் எம்.எல்.ஏ. நேற்று ஆஜராகி ஜாமீன் பெற்றார். இருப்பினும் 15 நாட்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட அவருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நீதிபதி உத்தரவின் பேரில் மான்ராஜ் எம்.எல்.ஏ. தனது செல்போனை நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.
Related Tags :
Next Story