திருப்புவனத்தில் யூனியன் சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது.
திருப்புவனத்தில் யூனியன் சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது.
திருப்புவனம்,
திருப்புவனத்தில் யூனியன் சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. யூனியன் தலைவர் சின்னையா தலைமை தாங்கினார். துணை தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) ஜோசப் அருள்ராஜ் வரவேற்றார். யூனியன் மேலாளர் கார்த்திகா மன்ற பொருட்கள் குறித்த அறிக்கையை வாசித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு: கவுன்சிலர் சுப்பையா: ஊராட்சி செயலர்கள் அனைவரையும் சுழற்சி முறையில் பணி மாற்றம் செய்ய வேண்டும்.கவுன்சிலர் ஈஸ்வரன்: ஆனைக்குளம், பத்துப்பட்டி கிராமங்களுக்கு சாலை வசதி, குடிதண்ணீர் வசதி, குளியல் தொட்டி கட்டித்தர வேண்டும்.கவுன்சிலர் ராமு: பொட்டப்பாளையம், புலியூர்-சாய்னாபுரம் ஆகிய ஊராட்சிகளில் மின்கம்பங்கள் சாய்ந்தும் மின் வயர்கள் தாழ்வாக செல்கிறது. கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ), மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும் பதில் தெரிவித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் வைத்தீஸ்வரி, தஸ்லீம், மீனாட்சி, இந்திரா, பிரியா, பூமாதேவி, ஜெயசித்ரா, மகாலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரவு-செலவு, நடைபெற வேண்டிய பணிகள் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. யூனியன் கூட்டத்தில் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்
Related Tags :
Next Story