வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேர் கைது
தா.பழூர் அருகே வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தா.பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கொள்ளிடக்கரை பகுதியில் தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தா.பழூர் தோப்பு தெருவை சேர்ந்த பாண்டித்துரை(வயது 40), அதே பகுதியை சேர்ந்த வீரமணி, திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த தங்கராசு (30), முருகன் (25), குவாகம் பகுதியை சர்ந்த அருள்மணி (31) ஆகிய 5 பேர் கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் அருகில் அமர்ந்து கோடாலிகருப்பூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க தீட்டம் தீட்டியது தெரிய வந்தது.
இதையடுத்து ரோந்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டதை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. அதன்பேரில், வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
Related Tags :
Next Story