மருத்துவ சமுதாயத்தினருக்கு 5 சதவீத உள்ஒதுக்கீடு


மருத்துவ சமுதாயத்தினருக்கு 5 சதவீத உள்ஒதுக்கீடு
x
தினத்தந்தி 8 March 2022 1:33 AM IST (Updated: 8 March 2022 1:33 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ சமுதாயத்தினருக்கு 5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க கோரிக்கை

ஸ்ரீரங்கம், மார்ச்.8-
தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்க ஸ்ரீரங்கம் மாநகரம் சார்பில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், முப்படைகளின் தலைவர் பிபின் ராவத் மற்றும் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆகிய முப்பெரும் விழா ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு வடக்கு மாவட்ட தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார்.
விழாவில் தமிழக அரசு வேலைவாய்ப்பில் மருத்துவ சமுதாய மக்களுக்கு 5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். சுதந்திரபோராட்டதியாகிவிஸ்வநாததாசிற்கு தபால்தலை வெளியிட வேண்டும். நலவாரிய ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ், ஆர்.ஐ.எம்.பி, செவிலியர் படிப்புகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக இளைஞரணி செயலாளர் மாரிமுத்து வரவேற்றார். முடிவில் ஆலோசகர் சுரேஷ் நன்றி கூறினார்.

Next Story