விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு பிரசாரம்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு பிரசாரம் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடந்தது.
ஆர்.எஸ்.மங்கலம்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு பிரசாரம் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடந்தது.
பிரசாரம்
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் அனைத்து விவசாயிகள் முல்லை பெரியாறு அணையை மீட்டெடுப்போம் என்ற முழக்கத்துடன் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் தொடங்கி நாளை பென்னிகுவிக் மண்டபத்தில் முடிவடையும் வகையில் பரப்புரை போராட்டம் நடத்தினர்.
ஆர்.எஸ்.மங்கலத்தில் மாநில அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரியும், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் போக்கை கண்டித்தும் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. மாநில விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு தலைவர் வழக்கறிஞர் முத்துராமலிங்கம், விவசாய சங்கத் தலைவர் சோழந்தூர் பாலகிருஷ்ணன், ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாசன சங்க தலைவர் தனபாலன், மாவட்ட தலைவர் மதுரைவீரன், செயலாளர் ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருகிற 15-ந்தேதி மதுரை நகரில் 6 மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவதால் அனைத்து விவசாய சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் இந்த பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாநில, மாவட்ட விவசாய சங்க நிர்வாகிகள் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயை பார்வையிட்டனர். இதில் ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் துணை தலைவர் சேகர், விவசாய அணி பிரதிநிதி வீரமணி, ஊராட்சி மன்ற தலைவர் நாகமுத்து, தி.மு.க. பகுத்தறிவு பாசறை ராஜு, கருங்குடி சுரேஷ், கவுன்சிலர் வைரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையில் போராட்டம்
முன்னதாக பி.ஆர்.பாண்டியன் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பரப்புரை செய்தபோது பேசியதாவது:-
முல்லை பெரியாறு அணை வலுவாக உள்ளது என்று கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அணையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மனு அளித்துள்ளது. இது தமிழக விவசாயிகளை அழிக்கும் சூழ்ச்சி ஆகும். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
வரும் ஏப்ரல் 7-ந் தேதி குடியரசு தலைவர் மாளிகையை முற்றுகையிட்டு முல்லை பெரியாறு அணையை மீட்பதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். அதற்கான பரப்புரை பயணம் ஆர்.எஸ்.மங்கலத்தில் தொடங்கி பென்னிகுவிக் மணிமண்டபத்தில் நிறைவடையும் என்றார்.
Related Tags :
Next Story