தனியார் மருந்து, மாத்திரைகளை பரிந்துரைத்தால் கடும் நடவடிக்கை; அரசு டாக்டர்களுக்கு மந்திரி சுதாகர் எச்சரிக்கை


தனியார் மருந்து, மாத்திரைகளை பரிந்துரைத்தால் கடும் நடவடிக்கை; அரசு டாக்டர்களுக்கு மந்திரி சுதாகர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 8 March 2022 1:53 AM IST (Updated: 8 March 2022 1:53 AM IST)
t-max-icont-min-icon

தனியார் மருந்து, மாத்திரைகளை பரிந்துரைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு டாக்டர்களுக்கு, சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மைசூரு:

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்

  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜன ஹவுஷதி திட்டம் தொடர்பான கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சி மைசூருவில் தனியார் ஓட்டல் ஒன்றில் காணொளி வாயிலாக பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது. இதனை மாநில சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தொடங்கி வைத்து பேசியதாவது:-

   ஜன அவுஷதி திட்டம் மூலம் பொதுமக்களுக்கு மலிவு விலையில் மருந்து, மாத்திரைகள் வினியோகிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி கொண்டு வந்தார். இதன் மூலம் ஏழை மக்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். வரும் நாட்களில் கிராமங்கள் தோறும் மலிவு விலையில் மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக அரசு ஆரம்ப ஆஸ்பத்திரியில் மருந்துகள் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

  மலிவு விலை மருந்து, மாத்திரைகளை பயன்படுத்துவதில் நாட்டிலேயே கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது.

கடும் நடவடிக்கை

  அரசு ஆஸ்பத்திரிகளில் போதுமான மருந்துகள் இல்லாத பட்சத்தில் டாக்டர்கள், பொதுமக்களிடம் மலிவு விலை மருந்தகத்தில் மருந்து, மாத்திரைகள் வாங்க பரிந்துரைத்து சீட்டில் எழுதி கொடுக்கலாம். அதைவிட்டுவிட்டு தனியார் மருந்து, மாத்திரைகளை பரிந்துரைத்தால் சம்பந்தப்பட்ட அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
   இவ்வாறு அவர் கூறினார்.

  இந்த நிகழ்ச்சியில் எல்.நாகேந்திரா எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுனந்தா பாலநேத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story