கர்நாடகத்தில் புதிதாக 155 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 155 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 8 March 2022 2:13 AM IST (Updated: 8 March 2022 2:13 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் புதிதாக 155 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  கர்நாடகத்தில் நேற்று 32 ஆயிரத்து 458 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இதில் புதிதாக 155 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 97 பேர் பாதிக்கப்பட்டனர். மைசூருவில் 14 பேர், சித்ரதுர்கா, கலபுரகியில் தலா 7 பேர் உள்பட 20 மாவட்டங்களில் 155 பேருக்கு பாதிப்பு உறுதியாகி இருந்தது. 10 மாவட்டங்களில் புதிய பாதிப்பு இல்லை. இதுவரை 39 லட்சத்து 42 ஆயிரத்து 730 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

  வைரஸ் தொற்றுக்கு பெங்களூரு நகரில் 3 பேர், பெலகாவி, மண்டியாவில் தலா ஒருவர் என 5 பேர் இறந்தனர். 27 மாவட்டங்களில் புதிதாக உயிரிழப்பு இல்லை. இதுவரை 39 ஆயிரத்து 996 பேர் இறந்து உள்ளனர். வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 349 பேர் குணம் அடைந்து நேற்று வீடு திரும்பினர். இதுவரை 38 லட்சத்து 99 ஆயிரத்து 647 பேர் குணம் அடைந்து உள்ளனர். 3 ஆயிரத்து 49 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 0.47 சதவீதமாகவும், உயிரிழப்பு 3.22 சதவீதமாகவும் உள்ளது.
  இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Next Story