கர்நாடகம் முழுவதும் 19,291 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு; அரசுக்கு ரூ.19,622 கோடி வருவாய் இழப்பு


கர்நாடகம் முழுவதும் 19,291 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு; அரசுக்கு ரூ.19,622 கோடி வருவாய் இழப்பு
x
தினத்தந்தி 8 March 2022 2:15 AM IST (Updated: 8 March 2022 2:15 AM IST)
t-max-icont-min-icon

கா்நாடகம் முழுவதும் உள்ள நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் அரசுக்கு சொந்தமான 19,291 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக கடந்த நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.19,622 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

  கர்நாடகத்தில் பெருநகரங்கள் மட்டுமின்றி, டவுன் மற்றும் கிராம பகுதிகளில் அதிகளவு அரசு நிலங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு, லே-அவுட் போட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  மேலும் சில இடங்களில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து தொழிற்சாலைகள், தனியார் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த இடங்களை கைப்பற்றி வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ளும்படி கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

  ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு சார்பில் எடுக்கப்படவில்லை. பெங்களூருவில் திப்பகொண்டனஹள்ளி ஏரியையொட்டி உள்ள பகுதி மற்றும் ஞானபாரதி, அர்க்காவதி லே-அவுட் உள்பட பல்வேறு இடங்களில் ஏரி நிலங்கள் மற்றும் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மாநிலம் முழுவதும் அரசு திட்டப்பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

ரூ.19 ஆயிரம் கோடி இழப்பு

  கடந்த 4-ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், கடந்த பட்ஜெட்டில் இழப்பீடு குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கர்நாடகத்தில் 63 உள்ளாட்சி அமைப்புகளில் பூங்காக்களுக்கு ஒதுக்கப்பட்ட 1,331 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் வீட்டு மனை மற்றும் தொழிற்சாலைகள் கட்டப்பட்டுள்ளது.

   இது தவிர மாநிலம் முழுவதும் 114 உள்ளாட்சி அமைப்புகளில் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 19 ஆயிரத்து 291 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தனியார் நிறுவனங்கள், வீட்டு மனை அமைக்கப்பட்டுள்ளது.

  இதனால் கர்நாடக அரசுக்கு 2021-22-ம் நிதியாண்டில் மட்டும் ரூ.19 ஆயிரத்து 622 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு அரசு என்ன தீர்வு காணபோகிறது என்று தெரியவில்லை.

Next Story