மேலூர் சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி
அமைச்சர் மூர்த்தி சார்பில் மேலூர் சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
மேலூர்,
மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காதலன் உள்பட 8 ேபரை போலீசார் கைது செய்தனர். இந்த நிைலயில் மேலூர் சிறுமியின் குடும்பத்திற்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி சார்பில் தி.மு.க. நிர்வாகிகள் நேரில் ஆறுதல் கூறி ரூ.5 லட்சத்தை வழங்கினர். அதை சிறுமியின் தாய், தாத்தா உள்ளிட்ட குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். அப்போது சிறுமியின் இறப்புக்கு தமிழக அரசு உரிய நீதி பெற்றுத் தரும் எனவும், தேவையான உதவிகளை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் செய்து தருவதாக உறுதி அளித்ததையும் சிறுமியின் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். அப்போது மாவட்ட கவுன்சிலர் நேருபாண்டியன், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் ராஜராஜன், வல்லாளபட்டி பேரூராட்சி தலைவர் குமரன், மேலூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, பழனி நாவினிப்பட்டி வேலாயுதம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story