நம்பியூா் அருகே நாய் கடித்ததில் மான் சாவு


நம்பியூா் அருகே நாய் கடித்ததில் மான் சாவு
x
தினத்தந்தி 8 March 2022 3:05 AM IST (Updated: 8 March 2022 3:05 AM IST)
t-max-icont-min-icon

நம்பியூா் அருகே நாய் கடித்ததில் மான் இறந்தது.

நம்பியூர்
நம்பியூர் அருகே உள்ள வரப்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கொண்டயம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் புள்ளிமான் ஒன்று இறந்துகிடப்பதாக விளாமுண்டி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் வனச்சரகர் சரவணன், வனவர் ஆறுமுகம், வனக்காப்பாளர் ஹரிவிக்னேஷ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த மானை பார்வையிட்டனர். அப்போது அந்த புள்ளிமான் 2 வயது உடைய பெண் புள்ளிமான் என தெரியவந்தது. மேலும், ‘தண்ணீர் தேடி கிராமத்துக்குள் புகுந்தபோது அந்த பகுதியில் உள்ள தெரு நாய்கள் துரத்தி கடித்து குதறியதில் இறந்தது,’ தெரியவந்தது. 
இதையடுத்து மானின் உடலை போலீசார் கைப்பற்றி காராச்சிக்கொரை வன கால்நடை ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

Next Story