மதுரையில் இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள்


மதுரையில் இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள்
x
தினத்தந்தி 8 March 2022 3:06 AM IST (Updated: 8 March 2022 3:06 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக மதுரையில் இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மதுரை,

பராமரிப்பு பணி காரணமாக மதுரையில் இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

பசுமலை துணைமின் நிலையம்

  பசுமலை துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கூடல்மலைத்தெரு, டி.சி.இ. கல்லூரி, ஜி.எஸ்.டி. ரோடு, சன்னதி தெரு, பாம்பன் நகர், கிரின் நகர் திருமலையூர் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும். 
 ஆனையூர் துணைமின் நிலையத்தில் நாளை(புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே அதனை சுற்றியுள்ள தினமணிநகர், கரிசல்குளம், பழைய மற்றும் புதிய விளாங்குடி, மீனாட்சிநகர், பாண்டியன் நகர், ஐ.ஓ.சி. நகர், வி.எம்.டபிள்யு காலனி, சொக்கலிங்கநகர், கூடல்நகர் 1 முதல் 13 தெருக்கள், அகில இந்திய வானொலி நிலையம் மெயின்ரோடு, சாந்திநகர், பாசிங்காபுரம், வாகைக்குளம், சிக்கந்தர்சாவடி, பாத்திமா கல்லூரி பகுதிகள், கோவில்பாப்பாகுடி பிரிவு, பூதகுடி, லெட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்தார்.

இலந்தைகுளம் துணைமின் நிலையம்

  ஐ.டி. பார்க் இலந்தைகுளம் துணைமின்நிலையத்தில் இன்று மின்பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இலந்தைகுளம், கோமதிபுரம், பாண்டிகோவில், பண்ணை, மேலமடை, கண்மாய்பட்டி, செண்பகத்தோட்டம், உத்தங்குடி, உலகநேரி, ராஜீவ்காந்தி நகர், சோலைமலை நகர், வளர்நகர், அம்பளகாரப்பட்டி, டெலிகாம்நகர், பொன்மேனி காடர்ன், ராம்நகர், பி.கே.பி. நகர், ஆதீஸ்வரன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்்தார்.
அரசரடி துணைமின் நிலையத்தில் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளது. எனவே அதனை சுற்றியுள்ள புதுஜெயில் ரோடு, முரட்டான் பத்திரிமில் காலனி, கரிமேடு மேலபெருமாள் வீதி, சம்மந்த மூர்த்தி தெரு, குட்செட் வீதி, டாக்சி நிறுத்தம் ஆர்.எம்.யு. வரை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Next Story