லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி டி.வி. மெக்கானிக் பலி


லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி டி.வி. மெக்கானிக் பலி
x
தினத்தந்தி 8 March 2022 3:16 AM IST (Updated: 8 March 2022 3:16 AM IST)
t-max-icont-min-icon

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி டி.வி. மெக்கானிக் பலியானார்.

பனமரத்துப்பட்டி:
மல்லூர் அருகே உள்ள வி.ஐ.பி. சிட்டியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 50). டி.வி. மெக்கானிக். இவர் நேற்று மதியம் 2 மணி அளவில் சேலத்தில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது மல்லூர் அருகே பனமரத்துப்பட்டி பிரிவு ரோடு மேம்பாலத்தின் மீது சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது பன்னீர்செல்வத்தின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story