வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மதுரையில் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை,
மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை தமிழ்நாடு வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில். ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கடந்த ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் வலையர் புனரமைப்பு வாரியம் தொடங்கப்பட்டது. அது தொடங்கி ஒரு ஆண்டாகியும் வாரியம் செயல்படவில்லை. எனவே இந்த வாரியத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்திட கோரி தமிழ்நாடு வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் செல்வகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் புலிகளின் இயக்கத்தின் மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கோரிக்கை வெற்றி பெற வாழ்த்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story