தி.மு.க.பொறுப்பாளர்கள் 4 பேர் தற்காலிக நீக்கம்
உசிலம்பட்டி நகர்மன்ற தேர்தலில் கட்சி கட்டுப்பாட்டை மீறிய தி.மு.க.பொறுப்பாளர்கள் 4 பேர் தற்காலிக நீக்கப்பட்டு உள்ளனர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி நகர்மன்ற தலைவர் தேர்தலின் போது தி.மு.க. கூட்டணி உறுப்பினர்கள் 13 பேர் பெரும்பான்மையாக இருந்த நிலையில் தி.மு.க. தலைமை கழகத்தின் சார்பில் அறிவித்த வேட்பாளர் செல்விக்கு எதிராக மற்றொரு தி.மு.க. வேட்பாளர் சகுந்தலா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில் தமிழகம் முழுவதும் இது போன்று கட்சி அறிவித்த வேட்பாளருக்கு எதிராக செயல்பட்ட பொறுப்பாளர்களை தி.மு.க. தலைமை அதிரடியாக நீக்கம் செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டி நகர செயலாளர் தங்கமலைப்பாண்டி, ஒன்றிய செயலாளர் சுதந்திரம், மாநில செயற்குழு உறுப்பினர் சோலை ரவி, நகர இளைஞரணி செயலாளர் சந்திரன் ஆகிய 4 பேரையும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக கூறி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story