விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி
விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி
தாராபுரத்தில் கிராம தங்கல் திடத்தின் கீழ் பொள்ளாச்சி வாணவராயர் வேளாண் கல்லூரி மாணவிகள் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் தினசரி அலங்கியம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கரும்பு விவசாயிகளிடம் கரும்புத் தோகையைக் கொண்டு இயற்கையான முறையில் கம்போஸ்ட் எனும் உரம் தயாரித்தல் குறித்த செய்முறை விளக்கம் அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், கரும்பு அறுவடையின் போது எடையில் இருந்து 20 சதவீதம் தோகையை கழிவாக வெளியேற்றப்படுகிறது. இதனை வீணாக்காமல் உரமாக நம்மால் பயன் படுத்த முடியும். மேலும் பெரும்பாலான சமயங்களில் தோகைகளை எரித்து விடுகின்றனர். இதனால் சுற்றுச் சூழல் மாசடைவதுடன் மண்வளம் பாதிக்கப்படுகின்றன. கரும்பு தோகையில் தயாரிக்கப்படும்
தொழுஉரம் ராசாயன உரத்தின் தேவையைக் குறைத்து வேளாண் பயிர்களின் விளைச்சலை அதிகப்படுத்துகிறது. அத்துடன் நோய் பரப்பும் கிருமிகள் மற்றும் பூச்சிகளைக் குறைக்கிறது. மக்கி போன உரத்தை உபயோகப்படுத்துவதன் மூலம் மண்ணின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகள் மேம்படுகிறது என்றனர். இந்நிகழ்ச்சியில் ஹம்சினி, திவ்யா, கோவிகா, காயத்ரி, ஹரினி, ஹர்சிதா, இந்துமதி, ஜனகநத்தினி, ஜசிமா பேகம், ஜெயஹரிதா, ஜெயஸ்ரீ மற்றும் காவியா ஆகிய வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
-------
Related Tags :
Next Story