சிறுவனுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது


சிறுவனுக்கு பாலியல் தொல்லை  போக்சோவில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 March 2022 4:55 PM IST (Updated: 8 March 2022 4:55 PM IST)
t-max-icont-min-icon

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்

காரைக்காலை அடுத்த திருபட்டினம் வி.எஸ். நகரைச் சேர்ந்தவர் குருபிரசாத் (வயது21). கூலி வேலை செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுவனை ஆசைவார்த்தைகள் கூறி ஒதுக்குபுறமான இடத்திற்கு அழைத்துச்சென்று, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன், தனது பெற்றோரிடம் வாலிபர் குருபிரசாத் செய்கையை கூறி அழுதுள்ளான். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர் திருபட்டினம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார், வழக்குப்பதிவு செய்து  வாலிபர் குருபிரசாத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.

Next Story