தரைமட்ட பாலத்தில் கொட்டப்படும் கழிவுகள்
தரைமட்ட பாலத்தில் கொட்டப்படும் கழிவுகள்
மடத்துக்குளத்தில் இருந்து கணியூர் செல்லும் ரோட்டின் இருபுறங்களிலும் பல இடங்களில் கழிவுகள் கொட்டப்படுகிறது. இரவு நேரம் வாகனங்களில் கழிவுகளை ஏற்றி வரும் மர்ம ஆசாமிகள் ஊருக்கு ஒதுக்குப்புறமான மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கழிவுகளை கொட்டி சென்றுவிடுகின்றனர்.
இதில் இறைச்சிகழிவுகள், மக்காத பாலிதீன் கவர்கள், மாத்திரைகள், மீதமான உணவுகள் ஆகியவை உள்ளது. பலவித கழிவுகளால் கிருமிகள் பரவும் வாய்ப்புள்ளது.வேடபட்டி தடுப்பணை, செக்கான் ஓடை, சோழமாதேவி அருகே தரைமட்டபாலம் உள்ளிட்ட பல இடங்களில் கழிவுகள் நிறைந்துள்ளன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
நடவடிக்கை
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது “கழிவுகள் கொட்டுவதால் இந்த வழித்தடம் சுகாதார கேடாக மாறி வருகிறது.விளைநிலங்களில் வேலை செய்ய முடியாத அளவு துர்நாற்றம் வீசுகிறது.எனவே மடத்துக்குளம்கணியூர் ரோடு மற்றும் தரைமட்ட பாலம் பகுதியில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றனர்.
Related Tags :
Next Story