தூத்துக்குடியில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் எல்ஐசி பங்குகள் விற்கப்படுவதை கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி எல்.ஐ.சி. அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை செய்வதை கண்டித்து கோரிக்கை அட்டை அணிந்து தூத்துக்குடி எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில் தலைமை தாங்கினார். ரமணி வரவேற்று பேசினார். கோட்ட இணை செயலாளர் சீனிவாசன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் எல்.ஐ.சி. ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். கிளைத்தலைவர் ராமசாமி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story